திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 22 ஆகஸ்ட் 2018 (21:48 IST)

நாளை அதிகாலை 'விசுவாசம்' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகிறது.

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதே நாளில் விஜய்யின் 'சர்கார்' படத்தின் டீசரும் வெளியாகும் என்று கூறப்பட்டதால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
 
இந்த நிலையில் 'விசுவாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி அதிகாலை 3.40 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் இன்றைய இரவு அஜித் ரசிகர்களுக்கு சிவராத்திரியாக இருக்க வாய்ப்பு உள்ளது
 
இந்த தகவல் வெளியான ஒருசில நிமிடங்களில் விசுவாசம் ஃபர்ஸ்ட்லுக் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. விசுவாசம் ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ள காரணத்திற்காக பெரும்பாலான அஜித் ரசிகர்கள் இன்று இரவு தூங்கப்போவதில்லை என்றே தெரிகிறது
 
இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.