விருதுநகர் பாலியல் வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.
விருதுநகர் பாலியல் வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.
விருதுநகரில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்று தரப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போலல்லாமல் எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கு இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் விருதுநகர் வன்கொடுமை வழக்கு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்