பயிர்களை அழித்து நிலம் கையகப்படுத்துதல்: என்.எல்.சி. விவகாரம் குறித்து டிஐஜி விளக்கம்
என்எல்சி நிறுவனம் பயிர்களை அளித்து நிலத்தை கையகப்படுத்திய புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் என்எல்சி நிறுவனத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி ஜியா உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார். அதில், என்எல்சி நிறுவனம் சம்பந்தப்பட்ட நிலங்களை பத்து வருடங்களுக்கு முன்பே கையகப்படுத்திவிட்டது என்றும் ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே கையகப்படுத்தினாலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் நிலங்களில் பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர என்எல்சி நிறுவனம் முன் வந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran