1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (19:04 IST)

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனலில் வரும் பெரியவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூட்யூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலில் பெரிய தம்பி என்ற பெரியவர் வரும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இதய நோய் ஏற்பட்டு இருப்பதாகவும் அவரது பேரன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்

தனது தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தற்போது சிகிச்சைக்கு பின்னர் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் குணமாக வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி என்றும் அவர் பதிவு செய்துள்ளார்

மேலும் மருத்துவமனையில் இருக்கும் வில்லேஜ் குக்கிங் பெரியவரின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் பலர் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பலர் வாழ்த்தி வருகின்றனர்

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற பெயரில் சமையல் வீடியோக்களை வெளியிட்டு வரும் பெரியவர், விக்ரம் படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பதும் ராகுல் காந்தி கலந்து கொண்ட சமையல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran