வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (17:19 IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Vikravandi Election
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறவில்லை என்பதை அடுத்து தற்போது இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது

திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, பாமக வேட்பாளராக சி அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அபிநயா ஆகிய மூவரும் முக்கிய போட்டியாளர்கள் என்பது குறிப்பிடப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran