1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (16:39 IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.. எத்தனை பேர் போட்டி?

Vikravandi Election
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில்  திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது.

ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது

இதனை அடுத்து வேட்புமனு பரிசீலனை மற்றும் வேட்புமனு வாபஸ் ஆகிய நடவடிக்கைகள் முடிவடைந்து ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva