செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 20 மார்ச் 2021 (18:49 IST)

விஜயகாந்த் மைத்துனர்….சுதீஸுக்கு கொரோனா உறுதி…

விஜயகாந்தின் மைந்துனர் அக்கட்சியின் துணைச்செயலாளருமான எ.கே.சுதீஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து அரசியல்கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடம் ஓட்டுகள் சேகரித்துவந்த விஜயகாந்தின் மைந்துனர்ம் அகட்சியின் துணைச்செயலாளருமான எ.கே.சுதீஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சுதீஸ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.