வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (13:27 IST)

பண்ருட்டி பேருந்து விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவி.. அண்ணாமலை இரங்கல்..!

பண்ருட்டி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவி என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்,.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி என்றும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி என்றும் முதல்வர் ஸ்டாலின் 
அறிவித்துள்ளார்,.
 
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு  
தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தமிழக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்,.
 
Edited by Mahendran