ஜெயலலிதா இருந்த போது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள்: விஜயகாந்த அதிரடி!

ஜெயலலிதா இருந்த போது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள்: விஜயகாந்த அதிரடி!


Caston| Last Modified திங்கள், 24 ஜூலை 2017 (14:09 IST)
சமீப காலமாக தமிழக அரசுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக பல விமர்சனங்களை வைத்து வருகிறார். அவருக்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கமலுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு மீதும், அனைத்து துறைகள் மீதும் விமர்சனங்கள் வைத்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கமலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.
 
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா இருந்த போது வாயை பொத்திக்கொண்டு இருந்த நடிகர் கமல்ஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
 
இது குறித்து பேசிய விஜயகாந்த், ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வாயைப் பொத்திக்கொண்ருந்த கமலஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என அமைச்சர்கள் கேள்வி கேட்கிறார்களே, நீங்களும் ஜெயலலிதா இருந்தபோது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள் என அதிரடியாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :