இல்லம் தேடி கல்வித்திட்டம் தேவைய? விஜயகாந்த் கேள்வி
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இந்த திட்டம் தேவையா என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இல்லம் தேடி கல்வி திட்டம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்த திட்டத்தை முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதால் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் எனவே இல்லம் தேடி கல்வித்திட்டம் அவசியமா என்பது தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்