புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (23:19 IST)

யானையை கொன்றவர்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் - விஜய்காந்த்

கேரள மாநிலத்தில் பசியோடு ஊருக்குள் புகுந்த யானைக்கு அங்குள்ளவர்கள் அன்னாசிப்பழத்துக்குள் பட்டாசு வைத்துக் கொடுத்ததால் படுகாயம் அடைந்த யானை, ஆற்றுக்குள் சென்று வலிதாங்கமுடியாமல் உயிரிழந்தது.

இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது : வாய் இல்லா ஜீவன்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும் எனவும், யானையை வெடி வைத்துக் கொலை செய்தவர்களுக்கு  அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்