திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 26 மே 2016 (14:41 IST)

விஜயகாந்தின் அடுத்த அதிரடி திட்டம்: உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் படுமோசமாக தோல்வியை சந்தித்து கட்சியின் அங்கீகாரத்தையும், சின்னத்தையும் இழந்து நிற்கும் தேமுதிக மீண்டும் தான் இழந்ததை மீட்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தினமும், மாவட்ட செயலாளர்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் வரவழைத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த்.
 
தன் கட்சியின் செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஜயகாந்த், வரும் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்த உள்ளாட்சி தேர்தலை மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து சந்திப்பாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளன. கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறவே விஜயகாந்தை வலியுறுத்தி வருவதாக பேசப்படுகிறது.
 
சட்டசபை தேர்தலில் போது கட்சியினரின் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவால் தற்போது கட்சியின் நிலமை மோசமாகி விட்டதால். விரைவில் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலை சந்திப்பார் என தேமுதிக வட்டாரத்தில் பேசுகின்றனர்.
 
மேலும் கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்ட தனது மகன் சண்முகப் பாண்டியனை கட்சிக்குள் கொண்டு வரவும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் எனவும் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிரடி முடிவு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.