ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (14:30 IST)

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்

இன்று ஒரே நாளில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்ந்துள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று என்றும் 5 மாநில தேர்தலுக்குப் பின்னரும் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது 
 
அதன்படி 137 நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது
 
இந்த விலை ஏற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்ந்து வரும் நேரத்தில் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக அதன் விலையை மேலும் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்