பெட்ரோல் விலை ரூ.22 அளவிற்கு படிப்படியாக உயரும்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
பெட்ரோல் விலை ரூ.22 அளவிற்கு படிப்படியாக தொடர்ந்து உயரும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நூத்தி முப்பத்தி ஏழு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்த நிலையில் இன்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை 70 காசுகள் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விலை ஏற்றத்திற்கு பின்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.16 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.19 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரே நாளில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகிய மூன்றும் விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் விலை ரூ.22 அளவிற்கு படிப்படியாக தொடர்ந்து உயரும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. மொத்தமாக விற்பனை செய்யப்படும் இடங்களில் டீசல் விலை படிப்படியாக 22 ரூபாய் உயர்ந்த நிலையிலும் சில்லறை வியாபாரத்தில் விலை உயர்த்தப்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.