திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (12:55 IST)

தண்ணீருக்கு வரியும் பெற்றுக்கொண்டு ஆவினில் தண்ணீர் வியாபாரமா? தேமுதிக கண்டனம்..!

குடிநீருக்கு வரியும் பெற்றுக்கொண்டு ஆவின் மூலம் குடிநீரை வியாபாரம் செய்வதா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஆவின் மூலம் மினரல் வாட்டர் பாட்டில் விற்பனை செய்யப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முறையாக குடிநீர் வரி செலுத்தி வரும் பொது மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமே தவிர அதனை விற்பனை செய்ய திட்டமிடுவது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் 
 
அதிமுக ஆட்சியில் அம்மா குடிநீர் விற்பனை செய்தபோது தேமுதிக கண்டித்தது என்றும் தற்போது ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்கும் திட்டத்திற்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் விஜயகாந்த அறிவித்துள்ளார். 
 
குடிநீருக்கு வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழக முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran