திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (10:31 IST)

நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்

நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 65வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 


 

 
அரசியல் ரீதியாக இல்லாமல், தனது குடும்பத்தோடும், தனது மகன்களின் நண்பர்களோடும் அவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் நள்ளிரவு 12  மணிக்கு தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
 
அப்போது எடுத்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை ‘பசுமை தமிழகம்’ என்ற பெயரில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 264 தொகுதிகளிலும், சுமார் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை தேமுதிக சார்பில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை நேற்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.