பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்-சரத்குமார் கட்சிகள் கூட்டணியா?

Vijayakanth
Last Modified செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (08:30 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக ஆலோசனை செய்து வருகின்றன. திமுகவும் அதிமுகவும் கூட்டணிக்கான காய்களை நகர்த்தி வரும் நிலையில் இந்த இரு கட்சியுடனும் கூட்டணி சேராத கட்சிகள் புதிய அணியை உருவாக்க முயன்று வருகின்றன.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவாதாக விஜயகாந்த் மற்றும் சரத்குமார் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால் விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் தலைமையில் ஒரு புதிய கூட்டணி இந்த பாராளுமன்ற தேர்தலில் அமையும் என தெரிகிறது.


இந்த நிலையில்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் சம்மதித்தால் கூட்டணி அமைக்க தயார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணியை அடுத்த கனகம்மாசச்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். இந்த இரு கட்சிகளும் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :