1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (09:03 IST)

சசிகலா லீடர் ஆகனும்... விஜய பிரபாகரன் திடீர் ட்விஸ்ட்!!

சசிகலா வருகை குறித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி அளித்துள்ளார். 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலா வருகை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனிடையே சசிகலா வருகை குறித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேமுதிக இந்த செகண்ட் வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. சசிகலா வருகையால் அதிமுகவில் குழப்பம் இருப்பதால் சரியாக இருக்குமா என்றால் காலம் தான்  முடிவு செய்யும். 
 
சசிகலா பெண்ணாக இருந்து கஷ்டப்படுவதால் அம்மாவும், நாங்களும் ஆதரிக்கிறோம். சசிகலா லீடராக எந்த காலத்திலும் நிரூபிக்கவில்லை ஜெயலலிதா பின்னால் தான் அவர் இருந்தார். தற்போது அவர் லீடராக நிரூபிக்க வேண்டும் என கோரியுள்ளார்.