அப்டேட் கேட்டு வெங்கட்பிரபுவை கெட்ட வார்த்தையால் திட்டிய ரசிகர்…!
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The GOAT என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமுகவலைதளத்தில் கோட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட் கொடுங்கள்” எனக் கேட்டார். அவருக்கு பதிலளித்த வெங்கட் பிரபு “அதற்கு இன்னும் காலம் வரவில்லை. ரொம்ப ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் “ரொம்ப சீக்கிரம் சொல்லி, ஒரு வாரம் ஆகும்.. டேய் அப்டேட் விட்றா” என சொன்னதோடு மட்டுமில்லாமல் ஒரு கெட்டவார்த்தையையும் சேர்த்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவருக்கு பதிலளித்த வெங்கட் பிரபு “சொல்லலாம்னு நெனச்சேன், இப்ப இதுக்கு மேல எப்படின்னு நீங்களே சொல்லுங்க” என விரக்தியோடு பதிலளித்துள்ளார்.