''அரசியல் விளையாட்டல்ல..'' நடிகர் விஜய்யை சீண்டிய ராஜேஸ்வரி பிரியா
மக்கள் பணியில் பாரபட்சம் இல்லாமல் மக்களுக்கான குரலாக விளங்க வேண்டும் விஜய் சார் என்று ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் பெருகிவிட்டது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். நேற்று பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறியிருந்தார்.
ஆனால், இந்தப் போதைப் பொருள் விவகாரம் குறித்து விஜய் ஏன் மெளனம் காக்கிறார் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
போதைப் பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடி நடைபெற்றுள்ளது என்ற செய்தி தெரிந்தும் அது குறித்து பேசாதவர்கள் மக்கள் நலனை எப்படி பாதுகாப்பார்கள்?
நடிகர் விஜய் அவர்கள் கட்சிப் பெயர் அறிவிக்கப்பட்ட அன்றே அரசியலுக்கு வந்துவிட்டார் என்றுதானே எண்ணிணோம்.Match அன்று விளையாடுவதற்கு அரசியல் விளையாட்டல்ல…2026 தேர்தல் வரை என்ன நடந்தாலும் மௌனம்தானா?
மக்கள் பணியில் பாரபட்சம் இல்லாமல் மக்களுக்கான குரலாக விளங்க வேண்டும் விஜய் சார் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் லியோ படத்தில் புகைப்பிடிப்பது போன்று இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிக்கு தொடர்பாக அவர் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது,.