இரண்டே நாளில் 29 தியேட்டர்களில் 'சர்காருக்கு பதில் பில்லாபாண்டி: என்ன காரணம்?

Last Updated: வியாழன், 8 நவம்பர் 2018 (09:41 IST)
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் குறைவு என்பதே பலரின் கருத்தாக இருந்தது. பலவீனமான வில்லன், சுமாரான பாடல்கள் ஆகியவை இந்த படத்தின் மைன்ஸ்களாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் 'சர்கார்' வெளியாகி இரண்டே நாள் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்தை சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டும் 29 திரையரங்குகளில் தூக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரையிடப்பட்டுள்ளது. தீபாவளி அன்று வெகுசில திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸான 'பில்லா பாண்டி' தற்போது அஜித் ரசிகர்களின் ஆதரவு காரணமாக 29 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் 'சர்கார்' திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி, ரூ.110 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் விஜய் ரசிகர்கள் மற்றும் பெய்டு விமர்சகர்கள் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் தயாரிப்பு தரப்பு அல்லது படக்குழுவினர் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமான வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :