கோவை வந்தார் தவெக தலைவர் விஜய்.. இன்னும் சில நிமிடங்களில் மாநாடு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு பிறகு முதல்முறையாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் முதல் அரசியல் மேடை இது என்பதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இந்த நிகழ்வின் மீது திரும்பியுள்ளது.
இந்த நிகழ்விற்காக செய்யப்பட்டுள்ள களப்பணி ஏற்பாடுகள், மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் விஜய்யை காண்பதற்காக திரண்டுள்ள கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ஆகியவை தவெக-வின் அரசியல் பலத்தை உணர்த்துகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக களத்தில் இறங்கி ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தகுந்த பாதுகாப்புடன் விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள், தொண்டர்கள் திரண்டு இருந்தனர். இதன்பின் அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு காரில் புறப்பட்டார்.
விஜய்யின் வருகைக்காக காத்திருக்கும் தொண்டர்களின் உற்சாகம் மற்றும் மைதானத்தின் பிரம்மாண்டத்தை விளக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Edited by Siva