1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2025 (14:10 IST)

கூட்டணி நீடிக்குமா?!.. திமுகவில் நடப்பது என்ன?.. விஜய் போடும் கால்குலேஷன்!..

vijay
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற பேச்சுவார்த்தையை துவங்கியிருக்கின்றன. இப்போதுவரை அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகியிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை எப்போதும் போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். 
 
ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து இருந்து பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து பேசியிருப்பதுதான் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
குறிப்பாக கட்சி தலைமை சொல்லி அவர் சந்திக்கவில்லை என்றால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அப்படி எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
 
மேலும், சிபிஎம் வெங்கடேசன் விஜயை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன யோசிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை நாம் கேட்கின்ற தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை என்றால் தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என அவர்கள் நினைப்பதாகவே பார்க்கப்படுகிறது.
 
ஒருபக்கம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் மற்றும் தனியார் ஏஜென்சி மூலம் எடுத்த சர்வே ஆகியவற்றை அடிப்படையாக வைத்து 2026 தேர்தலை சந்திக்க தொடங்கிவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இன்னும் சொல்லப்போனால் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் யார் என அவர் முடிவு செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
 
மேலும் கூட்டணியில் என்ன குழப்பம் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.. யார் வந்தாலும், வரவில்லை என்றாலும் 234 தொகுதிகளிலும் நாமே வெற்றி என்கிற நம்பிக்கையில் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்துங்கள் என முக்கிய நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின். ஒருபக்கம் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்.. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தவெக பக்கம் வரும் என நம்பி காத்திருக்கிறாராம் விஜய்.