1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (20:20 IST)

நெல்லையை அரசியல் போஸ்டர்களால் அதிரவைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

vijay makkal iyakkam
வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அரசியல் வாசகங்கள் கொண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர்  விஜய் மக்கள் இயக்கத்தினர்.

சுதந்திர போராட்ட தியாகியும் கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபுரம் பகுதியில்  மணிமண்டபத்தில் உள்ள  அவரது முழு உருவ சிலைக்கு, விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில்,  அரசியல் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘’அன்று வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சி செய்த ஐயா வ.சு.சிதம்பரம்பிள்ளை…இன்று தமிழர்களுக்காக புரட்சி செய்யப் போகும் தளபதியே முடிவெடு தமிழகமே…’’ என்று பாளையங்கோட்டை பகுதியில் ஒட்டிய போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.