வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 மார்ச் 2023 (17:46 IST)

ரூ.12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம்: அமைச்சர் சேகர் பாபு தகவல்..!

ரூபாய் 12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
 
ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இன்னும் சிறப்பாக டிசைன் செய்ய முதல்வர் அறிவுறுத்தியதை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
 
ஔவையார் என்றாலே ஆத்திச்சூடி தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் நிலையில் சங்க கால தமிழ் புலவர்களில் ஒருவரான ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுவது பெருமைக்குரியது என அவர் தெரிவித்தார். ஒளவையார் மணிமண்டபம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Siva