திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (20:52 IST)

விஜய் கொடி ஏற்றிய 6 மணி நேரத்தில் ஏற்பட்ட 4 பிரச்சனைகள்.. இப்பவே இவ்வளவா?

Vijay Flag
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்த நிலையில் கொடியேற்றிய நான்கு மணி நேரம் 6 மணி நேரத்தில் நான்கு பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்ததாகவும், முதல் நாளை இவ்வளவு பிரச்சனை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கட்சிக் கொடியை ஏற்றிய 6 மணி நேரத்திற்குள் விஜய் சந்தித்த குற்றச்சாட்டுகள்

1. அபராதம் நிலுவையில் உள்ள காரில் வருகை தந்ததாக செய்தி.

2. தவெக கட்சி கொடியில் உள்ள யானைகள், மாநில பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் இருப்பதாக புகார்.

3. விழாவில் அவர் தனது தாயை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

4. கொடியில் பயன்படுத்திய வாகை மலர், சங்க இலக்கியங்களில் உள்ள வாகை மலர் இல்லை என்றும், அது தூங்குமூஞ்சி வாகை என்றும் கருத்து

இதில் இருந்து அரசியல் உலகிற்கு வந்துள்ள விஜய், இனி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் சவால்களை சந்திக்க வேண்டும்.

ஆனா இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரே ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே வருகின்றன என்பதும், அவரது அரசியல் வருகையால். யார் பதட்டமாக இருக்கிறார்கள் என்றும் யூகிக்க முடிந்ததாக தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva