ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (18:52 IST)

அதிமுகவுடன் விஜய் கட்சி கூட்டணியா? சீமான் அதனால் தான் விலகினாரா?

அதிமுகவுடன் விஜய் கட்சி கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இரு கட்சிகளும் இணைந்து வரும் 2026 தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொன்னதற்கு அதிமுக மற்றும் விஜய் கட்சி ரகசிய உறவு வைத்திருப்பதால் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

திமுக போன்ற வலிமையான கட்சியை விஜய் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் தான் அதிமுகவுடன் விஜய் கட்சி இணைந்து போட்டியிடும் என்றும் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜய் ஆகிய இருவரும் மாறி மாறி முதலமைச்சராக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக உறுதி செய்துள்ள நிலையில் விஜய் கட்சி மட்டுமின்றி திமுகவில் உள்ள வேறு சில கட்சிகளையும் கூட்டணிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வியூகம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுவதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva