செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (11:44 IST)

நாங்க மொத்தம் 35 பேர் ; எங்களுக்கு பயம் கிடையாது : வெற்றிவேல் டெரர் பேட்டி

தினகரன் பக்கம் ஸ்லீப்பர் செல் உட்பட மொத்தம் 35 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டியளித்துள்ளார்.


 

 
புதுசேரி சொகுசு விடுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல் எம்.எல்.ஏ பேசியதாவது:
 
“அதிமுகவில் டிடிவி தினகரன் இல்லை என்று கூறும் அதிகாரத்தை ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது? அதர்மத்தை தடுக்கவே நாங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடியுள்ளோம். ஸ்லீப்பர் செல்களோடு சேர்த்து 35 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். விடுதியிலிருந்து சில எம்.எல்.ஏக்கள் வெளியேறிவிட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது” என அவர் பேசினார்.