ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (17:25 IST)

விஷாலின் ஐந்து கட்டளைகளுக்கு 'வெற்றி' தியேட்டர் உரிமையாளர் கூறிய பதில்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் விஷால் திரையரங்குகளுக்கு ஐந்து கட்டளைகள் என்று கூறும் வகையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து ஆலோசிக்க இன்று தயாரிப்பாளர் சங்கம் கூடிய நிலையில் சென்னை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் அவர்கள் இதுகுறித்து தனது கருத்தை ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார். அவர் கூறியது என்ன என்பதை தற்போது பார்ப்போம்



 
 
1. அரசு நிர்ணயித்த கட்டணம்: தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று, எங்களுக்காக டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து அளித்திருக்கிறார்கள். இனிமேல் அதை மட்டுமே வசூலிக்கவுள்ளோம்.
 
2. கேண்டீனில் MRP விலை: ஸ்டார் ஓட்டலில் ஒரு தோசை ரூ.250. அங்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் அந்த விலை கொடுத்து சாப்பிடுகின்றனர். நாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு நாங்கள் விலை நிர்ணயம் செய்து ஒழுங்காக வரி கட்டி விற்பனை செய்கிறோம்.
 
3. அம்மா தண்ணீர் பாட்டில்: நாங்கள் என்ன தேவையோ, அந்த தண்ணீர் பாட்டில் விற்றுக் கொள்ளப் போகிறோம். எங்களது திரையரங்கில் இலவசமாக RO தண்ணீர் அளிக்கிறோம்
 
4. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்: இளைஞர்கள் சிலர் தண்ணீர் பாட்டிலில் மது கலந்து கொண்டு வருவதால்தான் தண்ணீர் பாட்டிலை அனுமதிப்பதில்லை. எங்கள் தியேட்டரில் வயதானவர்களுக்கு தண்ணீர் பாட்டிலை அனுமதித்து கொண்டுதான் இருக்கின்றோம்ன்
 
5. இலவச பார்க்கிங் கட்டணம்: அரசே பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கிறது. விஷால் நேரடியாக அங்கும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூற முடியுமா?. திரையரங்கத்தில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை நெறிமுறைப்படுத்தலாம்.