செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (14:47 IST)

மிக அதிக மழை : தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

alangatti rain
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில்,தற்போது, ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, அந்தமான் கடலின் தெற்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிசம்பர் 7 முதல் 9 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் - மலாக்கா ஜலசந்தி ஆகியவற்றில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியின் தாக்கம் இதற்குக் காரணம்.

'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி' தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலை, வட தமிழகம் -  புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை டிசம்பர் 8-ம் தேதி காலை அடையும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நிலவரம் குறித்த தகவலை ஐஎம்டி வெளியிட்டிருந்த நிலையில்,   டிசம்பர் 9 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 10 ஆம் தேதி 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில்,தற்போது, ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் நாளை நள்ளிரவு முதல் வரும் வெள்ளிக்கிழமை மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு  ரெட் அலர்ட் தற்போது விடப்பட்டுள்ளது.