செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (13:17 IST)

நெஞ்சுரத்தோடு நேர்மையை கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு... கமல் டுவீட்

சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4  தேர்வில் முறைகேடு நடந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருந்க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக சிபிசிஐடி -டிஜிபி ஜாபர் சேட் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ;
 
ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை இந்த “தேர்வாணைய மோசடி” பறைசாற்றுகிறது. 
 
மேலும் கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு  நேர்மையை கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு... நம்பிக்கையை விடாதீர்கள்.  நாளை நமதே.என தெரிவித்துள்ளார்.