செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:27 IST)

415 நாள்கள் ஆகியும் முடியாத வேங்கைவயல் விவகாரம்? தேர்தலால் கவனிப்பாரற்று இருப்பதாக தகவல்..!

vengaivayal issue
வேங்கை வயல் விவகாரம் நடந்து 415 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில் தேர்தல் பரபரப்பு காரணமாக அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் கடந்த  2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நடந்தது. இதனை அடுத்து 5 பிரிவுகளின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில் இன்னும் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வழக்கு சிபிசிஐடி கையில் சென்று சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சிபிசிஐடியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக தெரிகிறது. மேலும் போலீசார் மந்தமான விசாரணையை நடத்தி வருவதாகவும் குற்றவாளியை பிடிக்கும்  அக்கறையே போலீசார் இல்லை என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 இது குறித்து சில மாதங்களாக  அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வந்த நிலையில் தற்போது தேர்தல் காலம் என்பதால் இந்த பிரச்சனையை மறந்து விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இந்த வழக்கு முடியவே முடியாத வழக்கு பட்டியலில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva