ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (20:47 IST)

தமிழ் திரையுலகில் பாலியல் புகாரா..! எச்சரிக்கும் அமைச்சர் சாமிநாதன்.!!

Saminathan
தமிழ் திரையுலகில் எந்த பாலியல் புகாரும் வரவில்லை என்றும் அப்படி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 
 
மலையாளத் திரையுலகில் வாய்ப்பு தேடி செல்லும் இளம் நடிகைகளுக்கு பாலியல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பல முன்னணி நடிகர்கள் பெயர்களும் அடிபட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.  
 
இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகிலும் பாலியல் தொடர்பான அழுத்தம் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தமிழ் திரையுலகில் இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.  அவ்வாறு பாலியல் புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

 
மலையாளத் திரை உலகில் மட்டுமின்றி தமிழ் திரைத் துறையிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், குறிப்பாக தெலுங்கில் இது அதிகம் என்றும் நடிகை சகிலா ஏற்கனவே புகார் தெரிவித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.