செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 மே 2024 (12:35 IST)

தமிழ்நாடு அரசு துறைகளில் பல்வேறு உடனடி வேலைவாய்ப்புகள்! – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அவசரமாக நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.



தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர், தட்டச்சு எழுத்தர், அக்கவுண்ட்ஸ் ஆபீசர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்ப உடனடி தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ளது.

மொத்தம் 118 வெவ்வேறு பணியிடங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்வில் 01.07.2024ம் தேதியின் படி 21 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.

இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14.06.2024. விண்ணப்பங்களை சரிசெய்ய ஜூன் 19 முதல் 21 வரை அவகாசம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கான முதல் தாள் தேர்வு தமிழ், பொது அறிவு கேள்விகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த தேர்வு 28.07.2024 அன்று நடைபெறும். இரண்டாம் தாள் தேர்வு விவசாயம், ஹோம் சயின்ஸ், ஸ்டேட்டிக்ஸ் உள்ளிட்ட பல பாட பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். தேர்வு எழுதுபவர் விண்ணப்பத்திலேயே எந்த துறை சார்ந்து தேர்வு எழுத போகிறார் என்பதை குறிப்பிடுதல் வேண்டும். இந்த இரண்டாம் தாள் தேர்வு 12.08.2024 முதல் 16.08.2024 வரை பாடவாரியாக வெவ்வேறு நாட்களில் நடைபெறும்.

இந்த இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்க்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதுகுறித்த முழுமையான விவரங்களை https://tnpsc.gov.in/Document/english/07_2024_CTS_English_.pdf இந்த டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் காணலாம்.

Edit by Prasanth.K