1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (19:11 IST)

பாதுகாப்பை உறுதி செய்ய கைத்துப்பாக்கி வேண்டும்: முதல்வரிடம் வி.ஏ.ஓக்கள் கோரிக்கை..!

தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் விஏஓக்கள் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விஏஓ மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகும் ஒரு சில வி.ஏ.ஓக்களுக்கு மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து அச்சுறுத்தல் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் தற்காப்பு பயிற்சி அளித்து கைதுப்பாக்கி வழங்க கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வி.ஏ.ஓக்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். 
 
கிராம நிர்வாக அலுவலம் ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ளதால் சிசிடிவி பொருத்த வேண்டும் என்றும் ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களிடம் மனு கொடுக்கும் போது உடனடியாக பரிசு என்ன செய்ய வேண்டும் என்றும் விஏஓ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
 
 
Edited by Mahendran