1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (11:10 IST)

131 கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இலவச இடம்: சென்னை பல்கலை அறிவிப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 131 கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இலவச இடம் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு இலவசமாக இடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும்,  வரும் கல்வியாண்டில் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்பு திருநங்கைகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது