வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (15:26 IST)

குஷ்பு படத்தை எரிக்க முயன்றபோது பெண் எம்.எல்.ஏ சேலையில் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டத்தை பிச்சை என்று விமர்சனம் செய்த குஷ்புவுக்கு திமுகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து தீயில் இட்டு எரித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்நிலையில் சிவகங்கை பகுதியில் குஷ்புவின் படத்தை எரிக்க முயன்ற போது பெண் எம்.எல்.ஏ சேலையில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சிவகங்கை அரண்மனை வாசல் என்ற பகுதியில் குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்த திமுக மகளிர் அணியினர் அவரது உருவப்படத்தையும் எரிக்க முயற்சித்தனர்.
 
அப்போது திமுக நிர்வாகி ஒருவர் குஷ்பு புகைப்படத்தின் மீது தீயை பற்ற வைத்த நிலையில் அருகில் இருந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் சேலையில் தீப்பற்றியது. இதனை அடுத்த அங்கிருந்த மகளிர் அணி நிர்வாகிகள் தமிழரசி எம்.எல்.ஏ சேலையில் இருந்த தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran