1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vanathi srinivasan says about cm stalin resolution

முதல்வரின் தீர்மானம் தீர்வை நோக்கியதாக இல்லை.. சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் பேச்சு..!

சட்டப்பேரவை
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில் இந்த தீர்மானம்  தீர்வை நோக்கியதாக இல்லை என சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினார். 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று காவிரி தொடர்பான தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி இந்த தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் முதல்வரின் தீர்மானம் குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது: 
 
விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி பிரதமர் மோடியின் ஆட்சி சட்டரீதியான நடவடிக்கை எடுத்தது. ஆனால்  திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் உள்ள நிலையில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற முடியாத நிலை உள்ளது.
 
அணை பாதுகாப்பு மசோதா மத்திய அரசு கொண்டு வந்தபோது திமுக எதிர்த்ததற்கு என்ன காரணம்? ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்,  விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை,  நதிகளை தேசியமயமாக்க வேண்டும், அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். இந்த தீர்மானம் தீர்வை நோக்கியதாக இல்லை என்று பேசினார்.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்: ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 260 உடல்கள்..!