திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜனவரி 2018 (18:06 IST)

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகத்தின் தலைவருமான பா வளர்மதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது.
 
கோவிலுக்கு சென்று வழிபடுவது, மண் சோறு சப்பிட்டது, தீச்சட்டி ஏந்தியதுமாக இருந்த பா வளர்மதிக்கு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியாரின் விருதா என அதிகமாக அவர் விமர்சிக்கப்பட்டார்.
 
வளர்மதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று அவரை நேர்காணல் செய்தது. அந்த பேட்டியில் பேசிய பா வளர்மதி, தான் தரக்குறைவான, அநாகரிகமான வார்த்தைகளை பேசியதே இல்லை என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் அவர் தினகரன் குறித்தும் ஓபிஎஸ் குறித்தும் பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வளர்மதி தினகரன் அணியில் இருந்த போது ஓபிஎஸ்-ஐ சண்டாளப் பாவி என்றும் ஜீரோபிஎஸ் என்றும் தனது முத்தான வார்த்தைகளை உதிர்த்தார். டீக்கடையில் இருந்த ஓபிஎஸை தினகரன் தான் முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தார் என விளாசினார்.
 
ஆனால் தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில் உள்ள வளர்மதி, சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதாவின் ரத்தத்தை குடித்த ஓநாய் கூட்டம் என சசிகலா, தினகரன், குடும்பத்தை சாடினார். மேலும் தினகரன் தான் துரோகத்தின் மொத்த வடிவம் என்றார் வளர்மதி.