புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (11:04 IST)

என் பாட்டு வரியை மாத்தி எனக்கே அனுப்புறாங்க! – பெட்ரோல் விலை குறித்து வைரமுத்து!

இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்த காமெடி பதிவு குறித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக வேகமாக விலை அதிகரித்து வந்த பெட்ரோல் தற்போது ரூ.100ஐ எட்டியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை குறித்த கலாய் மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில் இயற்கை படத்தில் வரும் ஒரு பாடலை மாற்றி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். “காதல் வந்தால் சொல்லியனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” என்று மாற்றி அந்த பாடல் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து “என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’” என்று பதிவிட்டு பெட்ரோல் டீசல் உயர்வு குறித்த ஹேஷ்டேகையும் குறிப்பிட்டுள்ளார்.