1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (20:00 IST)

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'கொட்டுக்காளி'- சிவகார்த்திகேயன் தகவல்

sivakarthikeyan, soori
"சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் "தயாரிப்பில் உருவாகியுள்ள *கொட்டுக்காளி” திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுங்கான பிரிவில் தேர்வாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

''பேரன்புக்குரியவர்களுக்கு,

 
நமது "சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் "தயாரிப்பில் உருவாகியுள்ள *கொட்டுக்காளி” திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுங்கான பிரிவில் தேர்வாகி உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
 
இத்திரைப்படத்தை உலகத் தரத்தில் இயக்கியுள்ள இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி' அண்ணன், அன்னாபென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுக்களும். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ்த்திரைப்படம் நமது 'கொட்டுக்காளி" என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி, இது போன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உதவேகம் அளித்து அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களுக்கே அனைத்து பெருமையும் சேரும்'' என்று தெரிவித்துள்ளார்.