செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 7 மார்ச் 2020 (20:03 IST)

கூந்தலில் காரை இழுத்து ஆசிரியை சாதனை ...வைரலாகும் வீடியோ

மகளிர் தினம் நாளை (மார்ச் 8 ) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், யோகா ஆசிரியை ஒருவர் தனது கூந்தலில் காரை இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையார் திருக்கோயில் கோபுரம் முன்பு, யோகா ஆசிரியை கல்பனா தனது கூந்தலில் காரை இழுத்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.