சீமானின் முகத்திரையை நார் நாராய் கிழித்த வைகோ
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை என்றும் கூறிய வைகோ, சீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெற்றதாகவும் வைகோ கூறியுள்ளார்.
மேலும் பிரபாகரன் - சீமான் சந்திப்பு வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், விடுதலைப்புலிகளின் சீருடை அணிய கூட சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்
மேலும் தன்னை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் டீல் முடிந்துவிட்டதாகவும், அடுத்து நியூட்ரியோனா டீல் தொடங்கிவிட்டதாகவும் நாம் தமிழர் கட்சியினர் போடும் மீம்ஸ்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வைகோ எச்சரிக்கை செய்தார். சீமானின் முகத்திரையை நார்நாராய் கிழித்த வைகோவின் இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக மாறியுள்ளது