புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (18:47 IST)

ம.தி.மு.க அலுவலகத்தில் தமிழக ஆளுநரை விமர்சித்த வைகோ...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடையதாக கோபல் தனது புலனாய்வு பத்திரிகையான நக்கீரனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரப்பான செய்திகள் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த போது போலீஸார் கைது செய்யப்பட்டார். 
அதனைதொடர்ந்து வைகோ இந்த கைதுக்கு  கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே அவரும் கைது செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் நேற்று மாலை நேரம் எழும்பூர் கோர்ட்டில் கோபாலுக்காக  வக்கில்கள் ஆஜராகி வாதிடும் போது, நீதிபதி இந்து பத்திரிக்கை என்.ராம் அவர்களை ஊடக பிரதிநிதியாக கருதி அவரிடமிருந்து  கருத்து கேட்டது. இதனையடுத்து பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகம் அதேசமயம் நீதியை நிலைநாட்டும் விதமாகவும்,நீதிபதி நக்கீரனை விடுதலையளித்து தீர்ப்பு அளித்தார். இதன்பின்பு வைகோவும் விடுவிக்கப்பட்டார்.
 
இன்று எழும்பூரிலுள்ள மதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்த நக்கீரன்  கோபால் மதிமுக பொதுச்செயலாலர் வைகோவை சந்தித்து நன்றி கூறினார்.
 
 பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர்.
அபோது வைகோ கூறியதாவது:
 
ஊடகத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் இன்று நக்கீரனுக்கு வந்த மாதிரி நாளை மற்ற ஊடகத்திற்கும் வரலாம்.
 
'செய்திகளை ஊடகங்கள் மூலமாக மக்களிடம்  கொண்டு செல்ல வேண்டும். இந்த 124 சட்டப்பிரிவுக்கு எந்த ஒரு முகாந்தரமும் கிடையாது என நீதிபதி கோபிநாத் கூறியது ராஜ்பவன் கன்னத்தில் விழுந்த அறை. மேலும் ஆளுநர் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து அமைச்சர்களை அனுமதிக்காமல் அதிகாரிகளை வைத்து கொண்டு நிர்வாகம் நடத்துகிறார்.' இவ்வாறு அவர் பேசினார்.