புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (11:29 IST)

தனி சின்னத்திலேயே போட்டி... வைகோ கறார்!!

மதிமுக தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி. 
 
சமீபத்தில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையிலை என்று இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, 
 
நான் பதவிகளுக்காக வாழவில்லை. லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னை பற்ரி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன. அதில் எழுதப்பட்டதில் எள்ளவும் உண்மையில்லை. 
 
சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.