செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (10:34 IST)

சரியும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை... சுகாதாரத்துறை வேண்டுகோள்!

தமிழகத்தில் 26 வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது.

 
ஆம் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். நாளை நடைபெறும் முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து இனி வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 
சென்னையில் 1,600 மையங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.