1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு

கொரனோ தடுப்பூசி கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கொரோனா  வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன. 
 
இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பேருந்து ரயில் மற்றும் திரையரங்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது 
 
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதே தவிர கட்டாயமல்ல என மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்
 
இதனால் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.