செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 18 மார்ச் 2022 (14:46 IST)

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நெல்லை   மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி  தொடங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 48 ஆயிரத்து 400 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
 
தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது என  மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் கூறினார்.