1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (14:57 IST)

வெளியானது யு.பி.எஸ்.சி தேர்வின் இறுதி முடிவுகள்: தமிழகத்தை சேர்ந்தவர் சாதனை..!

upsc
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த கோவில்பட்டி மாணவர் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளன 
 
2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ் இறுதி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 
யுபிஎஸ்சி இறுதி தேர்வில் முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளதாகவும்  இஷிதா கிஷோர் முதலிடத்தையும்  கரிமா லோஹியா 2வது முதலிடத்தையும்  உமா ஹராதி 3-வது முதலிடத்தையும்  பிடித்தனர்.
 
யூபிஎஸ்சி தேர்வில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி என்பவர் அகில இந்திய அளவில் 117 வது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளார். அதேபோல்  புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் சரவணன், 147-வது இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த மதிவதனி இராவணன் 447-வது இடம் பிடித்து யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 
நாடு முழுவதும் யூபிஎஸ்சி இறுதி தேர்வில் 933 மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் முதல் நான்கு இடங்களில் பெண்கள் தான் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran