வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (12:50 IST)

சென்னை புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி

Rain
சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கிய கனமழையால் வாகன் ஓட்டிகள் அவதியில் உள்ளனர்.
 
தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னை கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழைநீரில் கழிவுநீரும் கலந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர்.
 
இந்த நிலையில் மழை நின்றதும் மோட்டார் முலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை  என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 ஏற்கனவே தமிழகம் முழுவதும் நாளை கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள்  மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர் என்பதும் ஆங்காங்கு தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் புறப்படுகிறது.
 
Edited by Mahendran